டாடா குழுமத்தின் 7 உலோக நிறுவனங்கள் டாடா ஸ்டீலுடன் இணைகின்றன

September 23, 2022

டாடா குழுமத்தின் 7 உலோக நிறுவனங்கள் டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளன. டாடா குழுமத்தின், டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் (TSLP) , டின்பிளேட் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் (TCIL), டாடா மெட்டாலிங்க்ஸ் லிமிடெட் (TMT), டிஆர்எஃப் (TRF) லிமிடெட், இந்தியன் ஸ்டீல் & வயர் புராடக்ட்ஸ் லிமிடெட் (ISWP) டாடா ஸ்டீல் மைனிங் லிமிடெட் (TSML) மற்றும் எஸ்& டி மைனிங் கம்பெனி லிமிடெட் ஆகியவை டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளன. […]

டாடா குழுமத்தின் 7 உலோக நிறுவனங்கள் டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளன.

டாடா குழுமத்தின், டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் (TSLP) , டின்பிளேட் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் (TCIL), டாடா மெட்டாலிங்க்ஸ் லிமிடெட் (TMT), டிஆர்எஃப் (TRF) லிமிடெட், இந்தியன் ஸ்டீல் & வயர் புராடக்ட்ஸ் லிமிடெட் (ISWP) டாடா ஸ்டீல் மைனிங் லிமிடெட் (TSML) மற்றும் எஸ்& டி மைனிங் கம்பெனி லிமிடெட் ஆகியவை டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளன.

இது குறித்து டாடா நிறுவனம் ௯றியதாவது, இந்த ஒ௫ங்கிணைப்புத் திட்டமானது செக்யூரிட்டிகள் & எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI) மற்றும் பங்குச் சந்தைகள் ஆகியவற்றின் ஒப்புதலுக்கு உட்பட்டது. அத்துடன் இந்த ஒப்பந்தமானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குதாரர்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட அதிகாரிகள், ஆகியோரின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. மேலும் இது செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, வாடிக்கையாளர் திருப்தி , தயாரிப்பு பிரிவில் அதிக சந்தை இருப்பை அடைதல், மையப்படுத்தப்பட்ட கொள்முதல் மற்றும் சரக்கு மேலாண்மை மற்றும் பணப்புழக்க மேலாண்மை, அதுமட்டுமின்றி மூலப்பொருட்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல், ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதாவது, ISWP ஆனது கம்பிகள், மற்றும் கம்பி பொருட்கள் மற்றும் TMT ரீபார்களை உற்பத்தி செய்கிறது. அதனால் இது டாடா ஸ்டீலின் செயலாக்க முகவராகி, வெல்டிங் பொருட்கள், நெயில்கள், ரோல்ஸ் மற்றும் காஸ்டிங் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் நேரடி சந்தைப்படுத்துதலில் ஈடுபடும். மேலும், TML நிறுவனமானது எஃகு, ரீபார்கள், கம்பிகள், குழாய்கள் உட்பட பல எஃகு தயாரிப்புகளை வழங்குகிறது. அதேபோல் TSML அதற்குரிய விநியோக வலையமைப்பையும் வழங்குகிறது. மறுபுறம் S&T நிறுவனம் நிலக்கரி சுரங்கத்தை ஆய்வு செய்தல், சுரங்க மேம்பாடு, மற்றும் நிலக்கரி பிரித்தெடுத்தல் போன்றவற்றை செய்கிறது. இதில் TRF உள்கட்டமைப்புத் துறைக்கான பொருட்களைக் கையாளும் தயாரிப்புகள் மற்றும் கருவிகளை உற்பத்தி செய்வதால் டாடா ஸ்டீலுடன் TRF இன் இணைப்பு முக்கியமானது. அதேபோல் TSLP நிறுவனம் கடற்பாசி இரும்பு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளதால் TSLP இன் இணைப்பும் டாடா ஸ்டீலுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu