ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று இரவு நடத்திய பேரணியில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திராவில் நெல்லுார் மாவட்டத்தில் கண்டுக்கூர் நகரில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று மிகப்பெரிய பேரணி நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரணியின் முடிவில் நடந்த பொதுக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார். அப்போது கூட்ட நெரிசலால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி அருகில் உள்ள கால்வாய்க்குள் பலர் தவறி விழுந்தனர்.
இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடனே பொதுக் கூட்டத்தை ரத்து செய்த சந்திரபாபு நாயுடு, விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அறிவித்தார்.