பீகாரில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துக்களில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
பீகாரில் கடந்த சில வாரங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 21 பேர் உயிரிழந்ததாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் நீரில் மூழ்கி, பாம்பு கடி போன்ற விபத்துக்களின் காரணமாக இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு மாநில முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்து ரூபாய் 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் மோசமான வானிலையின் போது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.