சர்வதேச பாகிஸ்தான் விமான நிலையத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
சர்வதேச பாகிஸ்தான் விமான நிலையத்தின் 7000 ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஊதிய நிலுவைக்கு காரணம் விமான நிலைய நிர்வாகத்தின் பொருளாதார சிக்கல் ஆகும். இந்த விமான நிலையத்தில் நடந்து வரும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த பிரச்சனை எழுந்துள்ளது. இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான நிலைய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே நிலுவையில் உள்ள ஊதிய தொகையை கொடுக்கவில்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று விமான நிலையத்தின் தொடர்பாளர் தெரிவித்தார். அதோடு பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் வழங்கிய குறைந்த எரிபொருளால் பல சர்வதேச விமானங்களை ரத்தம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் விமான நிலைய நிர்வாகத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது வங்கிகளிடம் பாகிஸ்தான் விமான நிலையம் கடன் கேட்டிருக்கிறது.














