தீவுகளில் குடியேறினால் ரூ.71 லட்சம் பரிசு - அயர்லாந்து 

June 20, 2023

தீவுகளில் குடியேறினால் ரூ.71 லட்சம் பரிசுதொகை அளிக்கப்படும் என்று அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது. அயர்லாந்து நாட்டின் மக்கள் தொகை கடந்த சில வருடங்களாக குறைந்து வருகிறது. அதனால் அயர்லாந்தில் உள்ள பல தீவுகளில் மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. மக்கள் தொகையை அதிகரிக்க "அவர் லிவிங் ஐலேண்ட்" என்னும் திட்டத்தை அயர்லாந்து அரசு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதோடு இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 லட்சம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக சில விதிமுறைகளையும் […]

தீவுகளில் குடியேறினால் ரூ.71 லட்சம் பரிசுதொகை அளிக்கப்படும் என்று அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

அயர்லாந்து நாட்டின் மக்கள் தொகை கடந்த சில வருடங்களாக குறைந்து வருகிறது. அதனால் அயர்லாந்தில் உள்ள பல தீவுகளில் மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. மக்கள் தொகையை அதிகரிக்க "அவர் லிவிங் ஐலேண்ட்" என்னும் திட்டத்தை அயர்லாந்து அரசு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதோடு இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 லட்சம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

இதற்காக சில விதிமுறைகளையும் அந்நாட்டு அரசு விதித்துள்ளது. குடியுரிமை பெற விரும்புபவர்கள் முதலில் அயர்லாந்தில் மக்கள் தொகை குறைவாக உள்ள தீவு ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் அந்த தீவில் கட்டாயம் ஒரு நிலத்தையோ, கட்டிடத்தையோ விலைக்கு வாங்க வேண்டும். அந்த நிலம் அல்லது வீடு 1993ம் ஆண்டுக்கு முன்னதாக கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். அரசு வழங்கும் ரூ.71 லட்சத்தை கட்டாயம் அந்த சம்மந்தப்பட்ட கட்டிடத்தின் பராமரிப்புக்கு மற்றும் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டால் வருகிற ஜூலை 1 முதல் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu