தர்மபுரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 71 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில் 226 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுதினார்கள். அதில் 26 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தன. 6 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இதேபோல் 90 தனியார் பள்ளிகளில் 44 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 71 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்து உள்ளன.