பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வே வருவாய் 73 சதவீதம் அதிகரிப்பு

February 3, 2023

பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வே வருவாய் 73 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மாதம் ஜனவரி 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வேயின் வருவாய் ரூ.54,733 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.31,634 கோடி வருவாயே கிடைத்தது. எனவே, அப்போதைய வருவாயைவிட தற்போதைய வருவாய் 73 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்பதிவு பயணிகளின் எண்ணிக்கை சுமார் 6,590 லட்சமாகும். இது கடந்த ஆண்டு 6,181 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டைவிட […]

பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வே வருவாய் 73 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மாதம் ஜனவரி 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வேயின் வருவாய் ரூ.54,733 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.31,634 கோடி வருவாயே கிடைத்தது. எனவே, அப்போதைய வருவாயைவிட தற்போதைய வருவாய் 73 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்பதிவு பயணிகளின் எண்ணிக்கை சுமார் 6,590 லட்சமாகும். இது கடந்த ஆண்டு 6,181 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டைவிட 7 சதவீதம் அதிகமாகி உள்ளது.

முன்பதிவு பயணிகள் பிரிவில் வருவாய் ரூ.42,945 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 48 சதவீதம் அதிகம் ஆகும். வருவாயைப் பொறுத்தவரை ரூ.11,788 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.2,555 கோடிதான் கிடைத்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு முன்பதிவு அல்லாத பிரிவில் 4 மடங்குக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu