சுதந்திர தினத்திற்கு முன் 75 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு - இலக்கு நிர்ணயம்

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்கு முன், 75 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க, ரயில் இணைப்பு பெட்டிகள் தொழிற்சாலைக்கு (ஐ சி எஃப்) இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐ சி எஃப் பொது மேலாளர் பி ஜி மல்லையா இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள தகவல்கள் படி, தற்போதைய நிலையில் 21 வந்தே பாரத் ரயில்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதன் எண்ணிக்கை அடுத்த இரு மாதங்களுக்குள் 75 ஆக உயர்த்தப்படும். வந்தே பாரத் ரயில்களின் […]

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்கு முன், 75 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க, ரயில் இணைப்பு பெட்டிகள் தொழிற்சாலைக்கு (ஐ சி எஃப்) இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐ சி எஃப் பொது மேலாளர் பி ஜி மல்லையா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ள தகவல்கள் படி, தற்போதைய நிலையில் 21 வந்தே பாரத் ரயில்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதன் எண்ணிக்கை அடுத்த இரு மாதங்களுக்குள் 75 ஆக உயர்த்தப்படும். வந்தே பாரத் ரயில்களின் 85 முதல் 90% பாகங்கள் உள்நாட்டு பொருட்கள் மூலம் தயார் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட சில பாகங்கள் மட்டும் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும், 200 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றில், 80 ரயில்கள் ஐ சி எஃப் - ல் தயார் செய்யப்படும். விரைவில் அனைத்து முக்கிய இந்திய நகரங்களையும் வந்தே பாரத் ரயில்கள் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu