நைஜீரியாவின் அனம்ப்ரா மாநிலத்தில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்ததில் ஏறக்குறைய அனைவரும் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் முஹம்மது புஹாரி தெரிவித்தார்.
மழைக்காலம் தொடங்கியதில் இருந்து, 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மேற்கு ஆப்பிரிக்காவில் பல பகுதிகள் வெள்ளத்தால் அழிந்துள்ளன. நைஜீரியாவில் அதிக சுமை, வேகம், மோசமான பராமரிப்பு மற்றும் விதிகளுக்கு உட்படாததால் படகு விபத்துக்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.
நைஜர் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் படகு மூலம் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். அவ்வாறு செல்வதற்காக 85 பேர் கொண்ட படகு ஆற்றில் சென்று கொண்டிருந்ததாகவும் அச்சமயம் படகின் அதிக சுமையால் படகு கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அவசர சேவைகள் மீட்பு குழுவானது மொத்த இறப்பு எண்ணிக்கை 76 என உறுதிப்படுத்தியதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஆற்றில் நீர்மட்டம் மிக அதிகமாக இ௫ப்பது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு மிகவும் இடையூராக உள்ளது என்று தேசிய அவசரநிலை மேலாண்மை அமைப்பின் (NEMA) ஒருங்கிணைப்பாளர் திக்மன் கூறினார். மேலும் 10ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நீர்மட்டம் பத்தில் ஒரு பங்கு அதிகமாக இருக்கும் நிலையில், பல ஆண்டுகளில் இல்லாத அளவில் இது மோசமான வெள்ளம் என்றார். அதுமட்டுமின்றி மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்களை வழங்குமாறு நைஜீரிய விமானப்படையிடம் NEMA கோரியுள்ளது என்றும் ௯றினார். இது குறித்து, அதிபர் முஹம்மது புஹாரி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அவசர சேவைகளுக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய அதிபர், பாதிக்கப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடையவும், இந்த துயரமான விபத்தில் பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வுக்காகவும் தான் பிரார்த்திப்பதாக கூறினார். அதையடுத்து அனம்ப்ரா மாநில கவர்னர் சார்லஸ் சோலுடோ ௯றியதாவது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களை இடம்பெயருமாறு வலியுறுத்தினார். அதே நேரத்தில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கும் என்று கூறினார்.