76 வது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை காமராஜர் சாலையில் இன்று நடைபெற்றது.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள 76 ஆவது சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தேசியக்கொடி ஏற்ற இருக்கிறார்.
இதில் முதல் நாள் ஒத்திகையாக முதல்வரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் சுதந்திர தினத்தன்று அழைத்து வருவது இன்று மேற்பட்டது மேற்கொள்ளப்பட்டது.பின்னர் குதிரைப்படை, பெண் காவலர்கள் , ஏழு படை பிரிவினர் அனைவரும் அணிவகுப்பு நடத்துவர். அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு முதல்வர் தேசிய கொடி ஏற்றுவதற்கான ஒத்திகை நடைபெற்றது. ஏபிஜே அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது போன்ற விருது வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஒத்திகை நடைபெற்றது.
இதனால் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது காலை 6 மணி முதல் ஒத்திகை நிகழ்ச்சிகள் அனைத்தும் முடியும் வரை போக்குவரத்து நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.














