கர்நாடகத்தில் 7-வது ஊதியக்குழு அமலாகிறது

கர்நாடக அரசு 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் சித்தராமையா சட்டசபையில் விரைவில் வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக கர்நாடக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சுதாகர் ராவ் தலைமையிலான குழு ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்துவது குறித்து அரசியல் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் அடிப்படை சம்பளத்திலிருந்து 27.5% உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநில அரசு […]

கர்நாடக அரசு 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இது ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் சித்தராமையா சட்டசபையில் விரைவில் வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக கர்நாடக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சுதாகர் ராவ் தலைமையிலான குழு ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்துவது குறித்து அரசியல் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் அடிப்படை சம்பளத்திலிருந்து 27.5% உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநில அரசு ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.17,440.15 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஏழு லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu