உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் டி. குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று நடைபெற்ற 7-வது சுற்றும் டிராவில் முடிந்தது. இதன் மூலம் இருவரும் தொடர்ச்சியாக 4-வது சுற்றை டிரா செய்துள்ளனர். தற்போது இருவரும் தலா 3.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் குகேஷ் சற்று சாதகமான நிலையை பெற்றிருந்தார். ஆனால், லிரென் தனது அனுபவத்தை பயன்படுத்தி குகேஷின் சாதகப் போக்கை மாற்றி, ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார். 14 சுற்றுகள கொண்ட இந்த போட்டியில் முதலில் 7.5 புள்ளிகள் எட்டுபவர் சாம்பியனாவார் என்பது குறிப்பிடத்தக்கது.













