இமாச்சலில் சுற்றுலாவை மேம்படுத்த 8 ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இமாச்சல பிரதேசத்தில் தற்போதுள்ள 5 ஹெலிபோர்ட்களில் மூன்று வணிக ரீதியில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு போதுமான ஹெலிபோர்ட்ஸ் வசதி மாநிலத்தில் இல்லை. இதனை உணர்ந்து சுற்றுலாவை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மேலும் 8 ஹெலிபோர்ட்களை அமைக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள இந்த ஹெலிபோர்ட்களுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்தனர்.














