பாகிஸ்தானில் நிலச்சரிவு - 8 பேர் காயம் - பலர் மாயம்

April 18, 2023

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில், இன்று அதிகாலை 3:50 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதியான டோர்காமில் இந்த நிலச்சரிவு பதிவாகியுள்ளது. மின்னல் தாக்கியதில் மலைப்பகுதியில் இருந்து கற்கள் உருண்டு சாலைகளில் விழுந்துள்ளன. மேலும், மின்னலைத் தொடர்ந்து திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலச்சரிவுக்கு பிறகு, பல வாகனங்கள் தீப்பிடித்து எறிந்ததாகவும் கூறப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக, சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி உள்ள பொதுமக்களை மீட்க, மீட்புத் துறையைச் […]

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில், இன்று அதிகாலை 3:50 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதியான டோர்காமில் இந்த நிலச்சரிவு பதிவாகியுள்ளது.

மின்னல் தாக்கியதில் மலைப்பகுதியில் இருந்து கற்கள் உருண்டு சாலைகளில் விழுந்துள்ளன. மேலும், மின்னலைத் தொடர்ந்து திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலச்சரிவுக்கு பிறகு, பல வாகனங்கள் தீப்பிடித்து எறிந்ததாகவும் கூறப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக, சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி உள்ள பொதுமக்களை மீட்க, மீட்புத் துறையைச் சேர்ந்த 60 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இதுவரையில், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu