சித்தராமையாவுடன் 8 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு 

சித்தராமையாவுடன் இன்று கேபினட் அமைச்சர்கள் 8 பேர் பதவியேற்க உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமையிடம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் காங்கிரஸ் தலைமையிடம் தேர்ந்தெடுத்தது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் தொடரவும் அனுமதித்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் […]

சித்தராமையாவுடன் இன்று கேபினட் அமைச்சர்கள் 8 பேர் பதவியேற்க உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைமையிடம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் காங்கிரஸ் தலைமையிடம் தேர்ந்தெடுத்தது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் தொடரவும் அனுமதித்தனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் முதல்வராக சித்தராமையாவுக்கும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாருக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். மேலும் இன்று முதல்வர், துணை முதல்வருடன் கேபினட் அமைச்சர்கள் 8 பேரும் பதவியேற்கின்றனர். இந்த விழாவில் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றன‌ர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu