கேரளாவில் கனமழை காரணமாக 8 பேர் பலி

கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். மேலும் வருகிற 22 ஆம் தேதி வரை கேரள மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை மழை பாதிப்பில் இருந்து 224 பேர் மீட்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள […]

கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். மேலும் வருகிற 22 ஆம் தேதி வரை கேரள மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை மழை பாதிப்பில் இருந்து 224 பேர் மீட்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள தற்காலிக முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 97 வீடுகள் சேதம் மற்றும் ஒரு வீடு முழுமையாக இடிந்தும் உள்ளது. இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் கொச்சி- தனுஷ்கோடி இடையே உள்ள நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக அங்குள்ள ஆலப்புழா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கோட்டயம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu