கத்தாரில் 8 கடற்படை வீரர்கள் மேல்முறையீடு செய்ய 60 நாட்கள் அவகாசம்

January 5, 2024

கத்தாரில் பணியாற்றி வந்த 8 இந்திய கடற்படை அதிகாரிகள் நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர். இந்திய கடற்கரையில் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற 8 பேர் கத்தாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள் வேறு நாட்டிற்காக நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக கத்தார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு அக்டோபர் 26ஆம் மரண தண்டனை விதித்து உத்தரவிட பட்டது. இந்நிலையில் அவர்களது குடும்பத்தினர் கத்தார் மேல்முறையீட்டு கோர்ட்டில் […]

கத்தாரில் பணியாற்றி வந்த 8 இந்திய கடற்படை அதிகாரிகள் நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர்.

இந்திய கடற்கரையில் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற 8 பேர் கத்தாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள் வேறு நாட்டிற்காக நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக கத்தார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு அக்டோபர் 26ஆம் மரண தண்டனை விதித்து உத்தரவிட பட்டது. இந்நிலையில் அவர்களது குடும்பத்தினர் கத்தார் மேல்முறையீட்டு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் மரண தண்டனையை சிறை தண்டனையாக குறைத்து கடந்த வாரம் உத்தரவிடப்பட்டது. மேலும் எட்டு பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய 8 இந்தியர்களின் வக்கீல்கள் குழுவிற்கு 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu