இங்கிலாந்து நாட்டில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 650 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சி ஆகியவை மோதிக் கொள்கின்றன. வேட்பாளர்களாக, இங்கிலாந்து மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் களம் காண்கின்றனர். அந்த வகையில், கவின் ஹரன், மயூரன் செந்தில்நாதன், உமா குமரன், கமலா குகன், நரனி குத்ரா ராஜன், டெவினா பால், கிருஷ்னி, ஜாகிர் ஹுசைன் ஆகிய 8 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.