மீன்பிடி தடைகாலம் தொடங்கியதில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 800 விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது. மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த கால கட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 60 நாட்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
சென்னை காசிமேடு துறைமுகத்தில் 810-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற படகுகளும் கரைக்கு திரும்பி விட்டன. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வரும் நாட்களில் மீன் விலை கடுமையாக உயரும்.