முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் டோக்கியோவில் ரூ.818 கோடியில் முதலீட்டு ஒப்பந்தம்

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் டோக்கியோவில் ரூ.818 கோடியில் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றுள்ள அவர் அங்கு முதலீட்டாளர்கள் மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் நிர்வாகிகள், உயர் அதிகாரிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) சார்பில் நேற்று நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின் […]

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் டோக்கியோவில் ரூ.818 கோடியில் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றுள்ள அவர் அங்கு முதலீட்டாளர்கள் மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் நிர்வாகிகள், உயர் அதிகாரிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) சார்பில் நேற்று நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானை சேர்ந்த 6 தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu