சென்னையில் 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை

சென்னையில் இன்று முதல் 82 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், தக்காளியின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ஒன்றிற்கு ரூ.60 வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது இந்த விலை ஏற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் தடுக்க, […]

சென்னையில் இன்று முதல் 82 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், தக்காளியின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ஒன்றிற்கு ரூ.60 வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது இந்த விலை ஏற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் தடுக்க, ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் முதல்கட்டமாக வடசென்னையில் 32 ரேஷன் கடைகளிலும், மத்திய மற்றும் தென் சென்னையில் தலா 25 ரேஷன் கடைகளிலும் என மொத்தம் 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும். மேலும், தேவைக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள பிற பகுதிகளிலும் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu