82 வயது மூதாட்டி பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை

பளு தூக்கும் போட்டியில் கோவையை சேர்ந்த 82 வயதான மூதாட்டி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் கோவையை சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி, 50 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு, வார இறுதியில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி செய்துள்ளார். இதன் விளைவாக, டெல்லியில் 'நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்' சார்பில் நடைபெற்ற பளு தூக்கும் […]

பளு தூக்கும் போட்டியில் கோவையை சேர்ந்த 82 வயதான மூதாட்டி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் கோவையை சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி, 50 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு, வார இறுதியில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி செய்துள்ளார்.

இதன் விளைவாக, டெல்லியில் 'நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்' சார்பில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று, முதலிடத்தை பிடித்து அனைவரையும் அசத்தியுள்ளார். கிட்டம்மாளின் சாதனையை அடுத்து, தங்கப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu