கடந்த மே மாத இறுதியில், 2000 ரூபாய் நோட்டுக்கள் செப்டம்பர் மாத இறுதி வரையில் மட்டுமே செல்லுபடி ஆகும்; அதற்குள்ளாக மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் திருப்பிச் செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, பொதுமக்கள், வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை திருப்பிச் செலுத்தி வருகின்றனர். தற்போது, ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி, 88% 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இவற்றின் மதிப்பு 3.14 லட்சம் கோடி எனவும் கூறியுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி அளித்த தகவலின் படி, தற்போதைய நிலையில், 42000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவையும், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் திருப்பி செலுத்தப்படும் என நம்பப்படுகிறது. மேலும், மத்திய அரசின் 2000 ரூபாய் வாபஸ் அறிவிப்பு வெளியான போது, 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. தற்போது, அதில் 3.14 லட்சம் கோடி திரும்பி உள்ளதால், ஆர்பிஐ மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.