தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து 880 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 27, 28 ஆகியவை வார இறுதி நாட்கள் என்பதால் சென்னையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் வெளியூருக்கு பயணம் மேற்கொள்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு 550 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் போன்ற இடங்களுக்கு 130 சிறப்பு பேருந்துகளும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகளும் என மொத்தமாக 880 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான பயண சீட்டுகளை www.tnstc என்ற இணையதளத்தின் மூலமாகவும் மற்றும் TNSTC செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.