தமிழகத்தில் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் தற்போது அரையாண்டுத் தேர்வு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நடைபெற்று வருகிறது. இதில் அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் தேர்வு 23-ந்தேதியுடன் முடிவடையும், 24-ந்தேதி முதல் விடுமுறை தொடங்கும். பள்ளிகள் ஜனவரி 2-ந்தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளன. தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும்.
பள்ளிகளுக்கு விடுமுறை காரணமாக, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட விரும்பும் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறார்கள். சென்னையில் இருந்து கேரளா மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. ஆம்னி பஸ்களில் சில இடங்கள் கிடைக்கின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் கூட்டம் குறைவாக இருப்பினும், வார இறுதியில் முன்பதிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது