பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்கெட்டிற்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் மஞ்சள் பயிரிடலுக்கான முக்கிய மாவட்டமாக உள்ளது. விவசாயிகள் தங்கள் மஞ்சளை பெருந்துறை அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், செம்மாம்பாளையம் மஞ்சள் மார்க்கெட் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். இங்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 11-19 ஜனவரி இடையே ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டிற்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 13-17 ஜனவரி வரை மஞ்சள் ஏலம் நடைபெறாது. 20-ஆம் தேதி முதல் வழக்கம்போல் ஏலம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.