சத்தீஸ்கார், ஜார்கண்ட், கேரளா, மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் சிபிஐ-க்கு அளித்த பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பான எழுத்துப்பூர்வ கேள்விக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்துள்ளார்.
அதில், "டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன சட்டம் 1946-ன் படி, மாநிலத்தில் சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசுகளிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். சில குறிப்பிட்ட குற்றங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள, மாநில அரசுகள் சிபிஐக்கு பொது ஒப்புதலை வழங்கியுள்ளன. இதன்மூலம், சிபிஐ அந்த குறிப்பிட்ட வழக்குகளை பதிவு செய்து விசாரிக்க முடியும்" என்று கூறியுள்ளார்.