ஈக்குவடோரியல் கினியா: மார்பர்க் கிருமி தொற்று காரணமாக 9 பேர் பலி - பொது முடக்கம் அறிவிப்பு

February 14, 2023

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஈக்குவடோரியல் கினியாவில், மார்பர்க் என்ற வைரஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய், எபோலா, கொரோனா போன்று விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக கருதப்படுகிறது. மேலும், இந்த நோய் 88% இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதால், மிகவும் அபாயகரமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த மார்பர்க் கிருமி தொற்று காரணமாக இதுவரை 9 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்பர்க் நோய்த்தொற்றால் காய்ச்சல், ரத்தப்போக்கு போன்றவை […]

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஈக்குவடோரியல் கினியாவில், மார்பர்க் என்ற வைரஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய், எபோலா, கொரோனா போன்று விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக கருதப்படுகிறது. மேலும், இந்த நோய் 88% இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதால், மிகவும் அபாயகரமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த மார்பர்க் கிருமி தொற்று காரணமாக இதுவரை 9 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மார்பர்க் நோய்த்தொற்றால் காய்ச்சல், ரத்தப்போக்கு போன்றவை ஏற்படுவதுடன், உடல் உறுப்புகள் பாதிப்படைந்து உடலின் செயல் திறன் குறையும் என சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நோய் தொற்று பரவும் தன்மை கொண்டது என்பதால், உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, கினியா பகுதியில் பொது முடக்கம் கொண்டுவர உத்தரவிட்டனர். அதன்படி, தற்போது அங்கு பொது முடக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மார்பர்க் வைரஸ் நோய் தொற்றுக்கு இதுவரை முறையான சிகிச்சையோ தடுப்பூசியோ கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu