எழும்பூர் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உறுதி அளித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றிவைத்து பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேசுகையில், ரயில் நிலையங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டுமென்ற பிரதமர் மோடியின் லட்சியத்தின் அடிப்படையில், தெற்கு ரயில்வேயில் சென்னை எழும்பூர், காட்பாடி, புதுச்சேரி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, எர்ணாகுளம் சந்திப்பு, கொல்லம் மற்றும் எர்ணாகுளம் டவுன் ஆகிய 9 ரயில் நிலையங்கள், விமான நிலையங்களின் தரத்துக்கு இணையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார்.














