பாரத ஸ்டேட் வங்கி, குறிப்பிட்ட சில வங்கி சேவைகளை வாட்ஸ் அப் மூலம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக, பிரத்யேக வாட்ஸ் அப் எண் வழங்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வரும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம், பயனாளர்கள் குறிப்பிட்ட வங்கி சேவையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், வங்கி கணக்கு இருப்பு, வங்கி கணக்கு அறிக்கை, ஓய்வூதிய தரவுகள், வங்கிகள் வழங்கும் கடன்கள் மற்றும் வட்டிகள் குறித்த விவரங்கள், சேமிப்பு கணக்குகள் விவரங்கள், என் ஆர் ஐ சேவைகள், உடனடி வங்கி கணக்கு தொடங்குதல், கடன் வழங்கல் மற்றும் இதர சேவைகள் வாட்ஸ் அப் மூலம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, +919022690226 என்ற பிரத்யேக வாட்ஸ் அப் எண் எஸ்பிஐ ஆல் வழங்கப்பட்டுள்ளது. இதில் தொடர்பு கொண்டு, பதிவு செய்து கொண்ட பின்னர், வங்கி சேவைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.