கொலம்பியா ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 9 வீரர்கள் உயிரிழப்பு

April 30, 2024

கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி கோர விபத்து ஏற்பட்டது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 9 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கொலம்பியாவில் போதை பொருள் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாண்டா ரோசா என்ற பகுதியில், போதை தடுப்பு நடவடிக்கைகளுக்காக ராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். முகாமில் உள்ளவர்களுக்கு தேவையான பொருட்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்படும். அந்த வகையில், நேற்று மதியம் பொருட்களை வழங்கி விட்டு திரும்பி வரும் வழியில் ஹெலிகாப்டர் […]

கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி கோர விபத்து ஏற்பட்டது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 9 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொலம்பியாவில் போதை பொருள் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாண்டா ரோசா என்ற பகுதியில், போதை தடுப்பு நடவடிக்கைகளுக்காக ராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். முகாமில் உள்ளவர்களுக்கு தேவையான பொருட்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்படும். அந்த வகையில், நேற்று மதியம் பொருட்களை வழங்கி விட்டு திரும்பி வரும் வழியில் ஹெலிகாப்டர் விபத்து நேர்ந்துள்ளது. தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்த ஹெலிகாப்டர், சாண்டா ரோசா நகராட்சிக்கு அருகிலேயே விபத்துக்குள்ளாகி உள்ளது. கொலம்பியா நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu