சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 9 ரயில் நிலையங்களின் கட்டுமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை 26.1 கி.மீ தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ தொலைவுக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ தூரத்துக்கும் வழித்தடம் அமைய உள்ளது. இந்நிலையில் இந்த 2ம் கட்ட திட்டத்தில் 9 ரயில் நிலையங்களின் கட்டுமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரு நிலையங்களுக்கிடையில் மிகக் குறைவான தூரம் மற்றும் சீரமைப்பு ஆகியவை காரணமாக 9 ரயில் நிலைய கட்டுமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ₹1200 கோடி வரை கட்டுமான செலவுகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.