TNSTC பேருந்தில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC), பயணிகள் 90 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய 60 நாட்கள் முன்பதிவு நடைமுறையை மாற்றி, பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, தற்போது 90 நாட்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். இந்த புதிய மாற்றம், 18-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. பயணிகள், www.tnstc.in இணையதளம் அல்லது TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணத்திட்டங்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இது பயணிகளுக்கு கூட்ட நெரிசலை தவிர்க்க உதவுகின்றது.