சீனாவின் ஹெனான் மாகாணத்தில் 90% மக்களுக்கு கொரோனா தொற்று உள்ளது - அரசாங்க அறிவிப்பு

January 9, 2023

சீனாவில், அதிக மக்கள் தொகை கொண்ட 3வது பெரிய மாகாணமாக மத்திய ஹெனான் உள்ளது. இந்த மாகாணத்தில் 90% மக்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாக அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. மத்திய ஹெனான் மாகாணத்தின் சுகாதார கமிஷன் நிர்வாகி கன் குவான்செங் இந்த தகவல்களை ஜனவரி 6ம் தேதியன்று, செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஹெனான் மாகாணத்தின் மக்கள் தொகை 99.4 மில்லியன் ஆகும். அதில் 88.5 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டிசம்பர் 19ஆம் […]

சீனாவில், அதிக மக்கள் தொகை கொண்ட 3வது பெரிய மாகாணமாக மத்திய ஹெனான் உள்ளது. இந்த மாகாணத்தில் 90% மக்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாக அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. மத்திய ஹெனான் மாகாணத்தின் சுகாதார கமிஷன் நிர்வாகி கன் குவான்செங் இந்த தகவல்களை ஜனவரி 6ம் தேதியன்று, செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஹெனான் மாகாணத்தின் மக்கள் தொகை 99.4 மில்லியன் ஆகும். அதில் 88.5 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டிசம்பர் 19ஆம் தேதி அதிக அளவிலான கொரோனா தொற்று பதிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையிலும், அந்த நாடு தொற்றுப் பரவல் விகிதத்தை குறைவாக வெளியிடுவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த வாரத்தில் வெறும் 120000 மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக சீன அரசாங்கத் தரவுகள் தெரிவித்தன. அதே வேளையில், மக்கள் போராட்டம் காரணமாக, கட்டுப்பாடுகள் பெரிதாக விதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu