தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல பொது மக்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்வதில் ஆர்வமாக உள்ளனர்.
பொதுமக்களின் வசதிக்காக 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இன்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 60 ஆயிரம் பேர் செல்ல முன்பதிவு செய்தனர். பெரும்பாலானவர்கள் 10ந் தேதி பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.