சென்னையில் சாலையோரம் வசிப்பவர்களில் 99% பேர் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இல்லாமல் இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சென்னையில் 9000 பேர் சாலையோரம் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சாலையோரங்களில் பொருட்கள் விற்பனை செய்வது, வீட்டு வேலை உள்ளிட்ட அமைப்பு சாரா தொழில்களை செய்து வருகின்றனர். இவர்களிடம் நலவாரியம் பற்றியும், நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்துள்ளதா என்பதையும் கண்டறிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் அதிகம் உள்ள ஜார்ஜ் டவுன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் 99 சதவீத பேர் தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் நலவாரியத்தில் அளிக்கப்படும் நலத்திட்டங்கள் தொடர்பாக தங்களுக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.