வாட்ஸ் அப்பில் மெசேஜ் யுவர்செல்ப் (Message Yourself) என்ற புதிய அம்சம் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தனக்குத்தானே செய்திகள் அனுப்பி கொள்ளும் விதத்தில், இந்த மெசேஜ் யுவர்செல்ப் அம்சம் உள்ளது. இதன் மூலம், வாட்ஸ்அப் பயனாளர்கள், பட்டியல் குறிப்புகள், நினைவூட்டல்கள் (notes, reminders) போன்றவற்றை தங்களுக்கு தாங்களே அனுப்பிக் கொள்ளலாம். இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த, பயனாளர்கள், தங்களது வாட்ஸ்அப் செயலியில், புதிய சேட் தொடங்கி (Create new Chat), பட்டியலிடப்பட்டுள்ள கணக்குகளில், தங்களது கணக்கை (You) தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், வழக்கமான முறையில் தகவல்களை அனுப்பலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் செயலிகளில் இந்த அம்சம் கொண்டுவரப்பட உள்ளது.