அதானி குழுமம், ராஜஸ்தானில் 450 மெகாவாட் காற்றாலை-சூரிய எரிசக்தி மின் நிலையங்களை அமைக்கிறது

December 5, 2022

அதானி குழுமத்தின் புத்தாக்க எரிசக்தி பிரிவான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில், சூரிய மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை ஒரே இடத்தில் கட்டமைத்துள்ளது. அங்கு, தனது மூன்றாவது கிளை காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தற்போது அமைதுள்ளது. இந்த புதிய காற்றாலை மற்றும் சூரிய எரிசக்தி நிலையத்தின் திறன் 450 மெகாவாட் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 420 மெகாவாட் சூரிய எரிசக்தியாகவும், 105 மெகாவாட் […]

அதானி குழுமத்தின் புத்தாக்க எரிசக்தி பிரிவான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில், சூரிய மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை ஒரே இடத்தில் கட்டமைத்துள்ளது. அங்கு, தனது மூன்றாவது கிளை காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தற்போது அமைதுள்ளது.

இந்த புதிய காற்றாலை மற்றும் சூரிய எரிசக்தி நிலையத்தின் திறன் 450 மெகாவாட் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 420 மெகாவாட் சூரிய எரிசக்தியாகவும், 105 மெகாவாட் காற்றாலை எரிசக்தியாகவும் பெறப்பட உள்ளது. எனவே, அதானி குழுமத்தின் ராஜஸ்தான் நிலைய எரிசக்தி உற்பத்தி திறன் 1440 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதுவே, இந்தியாவில் உள்ள பசுமை எரிசக்தி நிலையத்தின் மூலம் பெறப்படும் அதிக எரிசக்தி உற்பத்தி அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையத்திற்காக, SECI உடன், ஒரு kwh க்கு 2.67 ரூபாய் கணக்கில் 25 வருட எரிசக்தி ஒப்பந்தத்தில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu