கோல் இந்தியா நிறுவனம் 17% உற்பத்தி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

December 5, 2022

கோல் இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டில், இதுவரை, 412.6 மில்லியன் டன் அளவில் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இது, வருடாந்திர அடிப்படையில், 59.2 மில்லியன் டன் அளவு கூடுதலாகும். மேலும், வருடாந்திர அடிப்படையில், நிலக்கரி உற்பத்தியில் 17% உயர்வை நிறுவனம் பதிவு செய்துள்ளது. அத்துடன், 2023 ஆம் நிதி ஆண்டிற்கான உற்பத்தி இலக்கில், 99.7 சதவீதத்தை எட்டியுள்ளது. எனவே, வரும் மார்ச் மாதத்திற்குள், இந்த நிறுவனம் 287.4 மில்லியன் டன் நிலக்கரியை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். […]

கோல் இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டில், இதுவரை, 412.6 மில்லியன் டன் அளவில் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இது, வருடாந்திர அடிப்படையில், 59.2 மில்லியன் டன் அளவு கூடுதலாகும். மேலும், வருடாந்திர அடிப்படையில், நிலக்கரி உற்பத்தியில் 17% உயர்வை நிறுவனம் பதிவு செய்துள்ளது. அத்துடன், 2023 ஆம் நிதி ஆண்டிற்கான உற்பத்தி இலக்கில், 99.7 சதவீதத்தை எட்டியுள்ளது. எனவே, வரும் மார்ச் மாதத்திற்குள், இந்த நிறுவனம் 287.4 மில்லியன் டன் நிலக்கரியை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்.

இதுகுறித்து பேசிய கோல் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இந்த இலக்கு எளிமையாக எட்டப்படும் என்று உறுதியளித்தார். மேலும், மாதாந்திர அடிப்படையில், நவம்பர் மாத நிலக்கரி உற்பத்தி 14.7% உயர்ந்துள்ளதாக கூறினார். அத்துடன், மின் உற்பத்திக்காக அனுப்பப்பட்ட கோல் இந்தியாவின் நிலக்கரி அளவு 39.5 மில்லியன் டன் உயர்ந்து, 380.7 மில்லியன் டன்னாக உள்ளதாக கூறினார். இது வருடாந்திர அடிப்படையில் 11.6% உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu