மாருதி சுசுகி, சீட் பெல்ட் குறைபாடுகளை நீக்க, 9125 வாகனங்களை திரும்ப பெறுகிறது

December 6, 2022

மாருதி சுசுகி நிறுவனம், முன் இருக்கை சீட் பெல்ட்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை களைய, 9125 வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் இத்தகைய குறைபாடு நேர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சியாஸ், பிரீசா, எர்டிகா, எக்ஸ் எல் 6, கிராண்ட் வித்தாரா மாடல் கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன. முன் இருக்கை சீட் பெல்ட்களில், தோள்பட்டை உயரத்தை மாற்றம் செய்யும் அம்சத்தில் […]

மாருதி சுசுகி நிறுவனம், முன் இருக்கை சீட் பெல்ட்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை களைய, 9125 வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் இத்தகைய குறைபாடு நேர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சியாஸ், பிரீசா, எர்டிகா, எக்ஸ் எல் 6, கிராண்ட் வித்தாரா மாடல் கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன.

முன் இருக்கை சீட் பெல்ட்களில், தோள்பட்டை உயரத்தை மாற்றம் செய்யும் அம்சத்தில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. எனவே, குறைபாடுகள் உள்ள வாகனங்களின் உரிமையாளர்களுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு, வாகனங்கள் சரி செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாமல் இந்த குறைபாடு சரி செய்து தரப்படும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu