வேதாந்து கல்வி நிறுவனம் 385 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது

December 8, 2022

இந்தியாவைச் சேர்ந்த கல்வி நிறுவனமான வேதாந்து, இந்த வருடம், 4வது முறையாக பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இம்முறை 385 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். அது மட்டுமின்றி, நிறுவனத்தின் தோற்றுனர்கள், மூத்த அதிகாரிகள் உட்பட பெரும்பாலானோர் தங்களது 50% சம்பளத்தை இழக்க உள்ளனர். முன்னதாக, கடந்த மே மாதத்தில் 624 ஊழியர்களையும், ஜூலை மாதத்தில் 100 ஊழியர்களையும், வேதாந்து நிறுவனம் பணி நீக்கம் செய்திருந்தது. இந்த முறை, மனித வள மேம்பாட்டு துறை மற்றும் […]

இந்தியாவைச் சேர்ந்த கல்வி நிறுவனமான வேதாந்து, இந்த வருடம், 4வது முறையாக பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இம்முறை 385 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். அது மட்டுமின்றி, நிறுவனத்தின் தோற்றுனர்கள், மூத்த அதிகாரிகள் உட்பட பெரும்பாலானோர் தங்களது 50% சம்பளத்தை இழக்க உள்ளனர்.

முன்னதாக, கடந்த மே மாதத்தில் 624 ஊழியர்களையும், ஜூலை மாதத்தில் 100 ஊழியர்களையும், வேதாந்து நிறுவனம் பணி நீக்கம் செய்திருந்தது. இந்த முறை, மனித வள மேம்பாட்டு துறை மற்றும் விற்பனை துறையைச் சேர்ந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. பணி நீக்க நடவடிக்கைக்கு பின்னர், வேதாந்து நிறுவனத்தில், வெறும் 3300 ஊழியர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான பைஜூஸ் நிறுவனமும், நடப்பாண்டில், ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu