ஆஸ்திரேலியாவில் அமெரிக்க வாடகை கார் நிறுவனமான ஊபர், நுகர்வோர் விதிகளை மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சுமார் 14 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 முதல் 2021 ஆம் ஆண்டிற்குள், தங்களது மென்பொருள் அல்காரிதம் மூலம், ஊபர் நிறுவனம், தவறான முறையில் சவாரிகளை ரத்து செய்ததாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, சவாரியை ரத்து செய்ததற்கான கட்டணம் 89% ஆக தவறாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனவே, 0.5% க்கும் குறைவானவர்களே அந்த சமயத்தில் ஊபர் கார் சேவையை பயன்படுத்தி உள்ளனர். வாடிக்கையாளர்களை இவ்வாறு குழப்பியது ஆஸ்திரேலிய நுகர்வோர் விதிகளை மீறிய செயலாகும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், தனது வலைப்பதிவில், இந்த தவறான கட்டணம் குறித்து, ஆஸ்திரேலிய மக்களிடம் ஊபர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.














