இந்தியாவின் யூனிகார்ன் நிதி நிறுவனமான பாரத் பே, தனது முன்னாள் நிர்வாகி ஆஷ்நீர் குரோவர், அவரது மனைவி மாதுரி ஜெயின் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக நடுவர் மன்றத்தை நாடியுள்ளது.
சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றமான SIAC ன் விதிமுறைகளின் படி இந்த வழக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குரோவர் தன்னிடம் உள்ள 1.4% பங்குகளை இழப்பதுடன், நிறுவனத்தின் தோற்றுனர் என்ற அந்தஸ்தையும் இழப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம், குரோவரின், SIAC நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
குரோவர், போலியான ரசீதுகள் மற்றும் பத்திரங்களின் மூலம் பாரத் பே நிறுவனத்தை ஏமாற்றி, மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. அவரிடம் 8.5% நிறுவனத்தின் பங்குகள் உள்ளன. அதில் 1.4% அவர் முதலீடு செய்யாத பங்குகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்கவே இந்த வழக்கு பதிவாகியுள்ளது.