அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றது சீனாவை கோபப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தைவானைச் சுற்றி சீனா ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைவானைச் சுற்றியுள்ள சீன இராணுவப் பயிற்சிகள் உலகின் பரபரப்பான கப்பல் மண்டலங்களில் ஒன்றை சீர்குலைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தன்னுடைய பலத்தை காட்டுவதற்காக சீனா இத்தகைய செயலில் இறங்கியுள்ளது. இதனால் பரபரப்பான சில கப்பல் வழித்தடங்களில் போக்குவரத்து பாதிப்படைகிறது. ஏனெனில், இது கிழக்கு ஆசிய தொழிற்சாலை மையங்களில் உற்பத்தி செய்யப்படும் முக்கிய குறைக்கடத்திகள் மற்றும் மின்னணு உபகரணங்களை உலகளாவிய சந்தைகளுக்கு வழங்க பயன்படுகிறது. மேலும் இது இயற்கை எரிவாயு கொண்டுசெல்லப்படும் முக்கிய வழித்தடமாகும். உலகின் கிட்டத்தட்ட பாதி சரக்கு கப்பல்கள் குறுகிய தைவான் ஜலசந்தி வழியாக செல்கின்றன.
ஏற்கனவே COVID-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஒரு சிறிய இடையூறு ஏற்பட்டால் கூட உலக அளவிலான பாதிப்பு இருக்கும். இந்த போக்குவரத்து வழிகளை தற்காலிகமாக மூடுவது கூட தைவானுக்கு மட்டுமல்ல, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடனான வர்த்தக பரிமாற்றங்களை பெரிதும் பாதிக்கும்.