குஜராத் முதல்வராக பூபேந்தர் படேல் பதவியேற்றார்.
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 64.3 சதவீத வாக்குகள் பதிவாகின. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வகையில் 156 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் இன்று 7வது முறையாக பாஜக ஆட்சி அமைகிறது. பூபேந்தர் படேல் மீண்டும் முதல்வராகிறார். இவர்களுடன் 25 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.
காந்திநகரில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.