ஆந்திர பிரதேச மாநிலத்தில் 53 ஆய்வுக் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், 50 கிணறுகள், கோதாவரியில் உள்ள கே ஜி பேசின் பகுதியிலும், 3 கிணறுகள், கடப்பா பேசின் பகுதியிலும் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கான மொத்த மதிப்பு 2150 கோடி என சொல்லப்பட்டுள்ளது. கடந்த மாதம், ஆந்திர பிரதேச மாநிலத்தின் சுற்றுச்சூழல் அமைப்பு, கிணறுகள் அமைப்பதற்கான அனுமதியை வழங்கியது.
கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில், 2021 முதல் 2028 வரை, 50 கிணறுகள் அமைத்து ஆய்வு நடத்த திட்டமிட்டு இருப்பதாக ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது. இந்த 50 கிணறுகள் அமைப்பதற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கே ஜி பேசின் பகுதியில் இருந்து ஒரு நாளைக்கு 700 டன் எண்ணெய் மற்றும் 4.4 மில்லியன் ஸ்டாண்டர்ட் கியூபிக் பீட் எரிவாயு ஆகியவற்றை ஓஎன்ஜிசி உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.