இந்தியா - சீனா இடையே எல்லைப் பதற்றம் தீர்க்கப்பட வேண்டும் - ஐ நா வலியுறுத்தல்

December 14, 2022

கடந்த டிசம்பர் 9ம் தேதி, அருணாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள தபாங் பகுதியில், இந்திய - சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரின் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. இது குறித்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். மேலும், இந்த சம்பவத்தால் இந்திய தரப்பில் உயிரிழப்புகள் நேரவில்லை என தெளிவு படுத்தினார். மேலும், “இந்த சம்பவம் காரணமாக எல்லையில் அமைதி குலைக்கப்பட்டது. ஆனால், தற்போது, […]

கடந்த டிசம்பர் 9ம் தேதி, அருணாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள தபாங் பகுதியில், இந்திய - சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரின் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. இது குறித்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். மேலும், இந்த சம்பவத்தால் இந்திய தரப்பில் உயிரிழப்புகள் நேரவில்லை என தெளிவு படுத்தினார்.

மேலும், “இந்த சம்பவம் காரணமாக எல்லையில் அமைதி குலைக்கப்பட்டது. ஆனால், தற்போது, நிலைமை சீர் செய்யப்பட்டு, சகஜ நிலை திரும்பி உள்ளது. சீனா தரப்பில் இருந்தும் அமைதி காக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தூதரக அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்படும்” என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க இருதரப்பும் உடனடியாக முயற்சிகள் மேற்கொண்டதை அமெரிக்கா பாராட்டியுள்ளது. மேலும், ஐநா சபையின் பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக், “இந்தியா - சீனா எல்லை பிரச்சனை விரைவில் தணிக்கப்பட வேண்டும். இதை வளர விடக்கூடாது. அமைதி பேச்சு வார்த்தைக்கு இரு தரப்புக்கும் அழைப்பு விடுக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu