பி அண்ட் ஜி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 18% சரிவு

December 15, 2022

உலக அளவில், அதிகமான நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாக பி அண்ட் ஜி (P&G) அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இந்திய விற்பனை, வருடாந்திர அடிப்படையில், 8% உயர்வை பதிவு செய்துள்ளது. ஆனால், அதே வேளையில், நிறுவனத்தின் நிகர லாபம் 18% சரிவடைந்துள்ளது. மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தால் இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூலப்பொருட்களின் விலைகள் உயர்ந்ததால், இந்த நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனாலும், நிறுவனத்தின் லாபம் உயரவில்லை. பி அண்ட் ஜி நிறுவன […]

உலக அளவில், அதிகமான நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாக பி அண்ட் ஜி (P&G) அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இந்திய விற்பனை, வருடாந்திர அடிப்படையில், 8% உயர்வை பதிவு செய்துள்ளது. ஆனால், அதே வேளையில், நிறுவனத்தின் நிகர லாபம் 18% சரிவடைந்துள்ளது. மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தால் இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூலப்பொருட்களின் விலைகள் உயர்ந்ததால், இந்த நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனாலும், நிறுவனத்தின் லாபம் உயரவில்லை.

பி அண்ட் ஜி நிறுவன தயாரிப்புகளின் விற்பனை 13985 கோடியாக பதிவாகி உள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் நிகர லாபம் 1334 கோடியாக உள்ளது. குறிப்பாக, டைட் டிடர்ஜென்ட், பேண்டீன் ஷாம்பூ, பேம்பர்ஸ் டயப்பர் போன்ற நுகர்வு பொருட்களை விற்பனை செய்யும் பி அண்ட் ஜி ஹோம் ப்ராடக்ட்ஸ் என்ற கிளை நிறுவனம், 43% லாப இழப்பை பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் விற்பனை 5% உயர்ந்து, 6668 கோடியாக உள்ள நிலையில், லாபம் வெறும் 277 கோடியாக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu