காப்பீட்டு சேவைகள் வழங்குவதற்காக கோட்டக் மஹிந்திராவுடன் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஒப்பந்தம்

December 16, 2022

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக, கோட்டக் மஹிந்திரா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ் கிருஷ்ணன் கூறுகையில், " கோட்டக் மஹிந்திரா நிறுவனத்துடன் நாங்கள் இணைந்துள்ள ஒப்பந்தம், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முக்கியத் தருணம் ஆகும். அண்மையில், எங்கள் வங்கி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோம். அதன் […]

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக, கோட்டக் மஹிந்திரா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ் கிருஷ்ணன் கூறுகையில், " கோட்டக் மஹிந்திரா நிறுவனத்துடன் நாங்கள் இணைந்துள்ள ஒப்பந்தம், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முக்கியத் தருணம் ஆகும். அண்மையில், எங்கள் வங்கி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோம். அதன் பகுதியாக, காப்பீடு தொடர்பான சேவைகளை வழங்க கோட்டக் மஹிந்திரா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்று கூறினார். இந்த ஒப்பந்தம் மூலம், வங்கியின் வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, கோட்டக் மஹிந்திராவின் பொது காப்பீடு திட்டங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் எனக் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu