கச்சா எண்ணெய் மீதான விண்ட்பால் வரி குறைப்பு

December 16, 2022

இந்தியா, கச்சா எண்ணெய் மீதான விண்ட்பால் வரியை குறைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் 14% சரிவு காணப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் விமானப் போக்குவரத்துக்கான எரிபொருள் ஆகியவற்றிற்கான விண்ட்பால் வரி மற்றும் டீசலுக்கான ஏற்றுமதி வரி ஆகியவை குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் மீதான வரி ஒரு டன்னுக்கு 1700 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இது 4900 ரூபாயாக இருந்தது […]

இந்தியா, கச்சா எண்ணெய் மீதான விண்ட்பால் வரியை குறைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் 14% சரிவு காணப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் விமானப் போக்குவரத்துக்கான எரிபொருள் ஆகியவற்றிற்கான விண்ட்பால் வரி மற்றும் டீசலுக்கான ஏற்றுமதி வரி ஆகியவை குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் மீதான வரி ஒரு டன்னுக்கு 1700 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இது 4900 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், டீசலுக்கான ஏற்றுமதி வரி, லிட்டருக்கு 8 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், விமானப் போக்குவரத்துக்கான எரிபொருளின் விண்ட்பால் வரி, லிட்டருக்கு 5 ரூபாயில் இருந்து 1.5 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய் பேரல் ஒன்றை 60 டாலருக்கும் குறைவான விலையில் வாங்கியுள்ளது. எனவே தான், வரிகள் குறைக்கப்பட்டுள்ளன” என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu